தெரியப்படுத்துகிறார் சிவானந்தர் ––––– * உண்மை இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார். * குழந்தையைப்போல் துாய மனதுடன் இருங்கள். * உன்னை சீர்படுத்து. சமூகம் தானாகவே சீராகிவிடும். * ஒருநாளில் வருவதல்ல ஒழுக்கம். தினமும் அதை பின்பற்று. * நல்லவனாக இரு. நல்லதையே செய் * உண்மை, அன்பு ஆகிய இரண்டுமே உலகின் பெரிய சக்தி. * உலகம் ஒரு கண்ணாடி. நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும். * நாம் அதிகமாக நேசிக்கும் உருவத்திலேயே கடவுள் வெளிப்படுகிறார். * உனக்கு வரும் ஒவ்வொரு நோயும் கர்மவினையின் விளைவேயாகும். * எந்தவொரு வேலையை எடுத்தாலும் அதை முழுமையாக செய். * மனச்சோர்வை விட மோசமான நோய் வேறு கிடையாது. * உன் வாழ்க்கை நல்லதாக அமைய, பிறருக்கு நல்லது செய். * உடல்நலம் சரியில்லை என்றால், உன்னால் சாதனை செய்ய இயலாது. * இனிய பொய்யை விட, கசப்பான உண்மையே சிறந்தது. * பிறர் செய்யும் தவறை மறந்துவிடு. மனதில் அமைதி நிலவும்.