Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம்: ... பொள்ளாச்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு பொள்ளாச்சி அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா
எழுத்தின் அளவு:
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2022
09:07

சென்னை: சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டசபை மானியக் கோரிக்கையில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவ கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக எதிர்வரும் ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோயில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் உள்ளிட்ட 9 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், முண்டக கண்ணியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் உள்ளிட்ட 8 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில், திருக்கருக்காவூர் கற்பக ராட்சாம்பிகை கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் உள்ளிட்ட 6 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

இந்த ஆன்மிக சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோயில் பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா தொடர்பாக சுற்றுலாத்துறையில் பதிவு செய்தல் வேண்டும். மேலும் இது தொடர்பாக ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையத்தில் தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar