இச்சன்னதி பரமபதவாசலை அடுத்துள்ள, சந்திரபுஷ்கரணியின் கீழக்கு கரையில் அமைந்துள்ளது. இங்கு கோதண்டபாணியாக ஸ்ரீராமபிõõன் சுமார் 8 அடி உயரத்தோடு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவருக்க வலது புறம் கல்யாண கோலத்தில் சீதாப்பிராட்டியும், இடது புறம் இளையபெருமாள் என்று அழைக்கப்படும் லட்சுமணனும் சேவை சாதிக்கின்றனர். அருகில் சந்தானஆஞ்சநேயர் எனும் குட்டி ஆஞ்சநேயரும், அதனருகில் ஆதிசேஷனும் சேவை சாதிக்கின்றனர். இந்த கோதண்டராமர் நேபால் மகாராஜா அளித்த 108 சாளக்கிராமங்கள் கொண்ட மாலையணிந்து கண்களை நிறைக்கும் அழகுடன் காட்சியளிக்கிறார். இவரை தரிசித்தால் ராமரை ராமேஸ்வரத்தில் தரிசித்தபலன் உண்டு என இக்கோயில் அர்ச்சகர் கூறி சேவை செய்து வைக்கிறார்.
ராமனால் உகந்தளிக்கப்பட்ட ரங்கவிமானத்தை ராமர் இக்கோயிலில் இன்றளவும் சேவித்து வருவதாக நம்பிக்கை, இதனால்தான், மற்றெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக, ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டும், மேலப்பட்டாபிராமர், கிழப்பட்டாபிராமர், கீரைத்தோப்புராமர், போஜராமர், சேஷராயர் மண்டப கோதண்டராமர் என பல ராமர் சன்னதிகள் அமையப்பெற்று அங்கெல்லாம் ராமபிரான் பக்தர்களுக்கு சேவை சாதிப்பதோடு, அவர் ஸ்ரீரங்கநாதரையும் சேவித்துக் கொண்டிருப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.