திருத்தணி ஆடி கிருத்திகை விழா களை கட்டிய காவடி விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2022 10:07
நகரி: திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுவதை ஒட்டி, நகரியில் மலர் காவடிகள் விற்பனை செய்கின்றனர்.திருத்தணி முருகன் கோவிலில், இம்மாதம், 23ம் தேதி ஆடிக் கிருத்திகை நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர்.இந்நிலையில், நகரி பஜாரில், 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோரம் மலர் காவடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காவடியின் விலை, 400 - 500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. ஆடிக்கிருத்திகைக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் நகரியில் காவடிகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.பக்தர்கள் வசதிக்காக, நகரி பஸ் நிலையம் மற்றும் நகரி - புத்துார் சாலையோரம் காவடிகள் விற்பனை செய்கின்றனர்.இம்மாதம், 21 மற்றும் 22ம் தேதிகளில் காவடி விற்பனை அதிகளவில் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.