தேவகோட்டை: தேவகோட்டை நகர காவல் தெய்வம் கோட்டையம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா துவங்கியது. நேற்று பிடி மண் எடுத்து வரப்பட்டு மேடை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று காலை பீடத்திற்கு அபிஷேகம் பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கும் பெற்று பூஜைகள் நடந்தன. இன்று அம்மனுக்கு முதல் பொங்கல் வைக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேசக்கரங்கள் அமைப்பின் சார்பில் பக்தர்களுக்கு துணிப்பை வழங்கினர். பக்தர்களுக்கு துணிப் பை வழங்க விருப்பமுள்ளவர்கள் தகவல் தெரிவித்து இருப்பிடம் வந்து துணி பைகள் பெற்று பக்தர்களுக்கு வழங்கப்படும். மேலும் கோவில் திருவிழாவையொட்டி அப்பகுதியில் போடும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.