பதிவு செய்த நாள்
20
ஜூலை
2022
08:07
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாயையொட்டி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.
விழாவையொட்டி முன்னதாக அசோக் நகர் பகவதி அம்மன் கோவில், மீனாட்சிபுரம், செட்டியார் குளம், வீரா கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மேளதாளம் முழங்க அந்தந்த பகுதிகளில் இருந்து அம்மனுக்கு பூ கூடைகளில் பல்வேறு வகையான பூக்களை எடுத்து வந்தனர். கோவிலில் பூ கூடைகளை வைத்து வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பின் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி உள்ளிட்ட பல வகையான பூக்களை கொண்ட மாரியம்மன் க்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின் அபிஷேக ஆராதனை மற்றும் தீபாவளிகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மானை தரிசனம் செய்தனர்.இதைப்போலவே நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன், அசோக் நகர் பகவதி அம்மன், கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவில், கணவாய்பட்டி கணவாய் கருப்பணசாமி கோவில், திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவில், வேம்பார்பட்டி துர்க்கை அம்மன் கோவில், அய்யாபட்டி அய்யனார் கோவில், சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவில், கோபால்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடி மாத முதல் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.