வரதராஜப்பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் யாகசாலை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2022 04:07
பெரியகுளம்: வரதராஜ பெருமாள் கோயிலில் பிரசித்திப்பெற்ற 3 நாட்கள் திருப்பவித்ரோத்ஸவம் கோலாகலமாக நடந்தது.
பெரியகுளம் வரதராஜாப்பெருமாள் கோயிலில் உலக நன்மைக்கும் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் கிடைக்க ஜூலை 23 முதல் மூன்று நாட்கள் திருப்பவித்ரோத்ஸவம், தினமும் காலை 8:30 மணி மாலை 6:00 மணி இரு வேளையிலும் யாகசாலை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் யாகசாலை பூஜைக்கு மஞ்சள் பொடி, நெய், வாழைப்பழம்,தேன் வழங்கினர். வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்களுக்கு பவித்ர மாலை வழங்கப்பட்டது.