பதிவு செய்த நாள்
28
ஜூலை
2022
10:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, திப்பம்பட்டியில் பழமை வாய்ந்த சிவசக்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், புதியதாக வாராஹி அம்மன், ராஜ கணபதி, ஆஞ்சநேயர், ராமர், சீதை, விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட சிலைகள், புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, சன்னதிகள் கட்டப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பா
பிஷேக விழாவை முன்னிட்டு, கோபுர கலச அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை , 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடை பெற்ற து. மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டன. பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேக விழாவை கண்டு, சுவாமியை வழிபட்டனர்.