கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட தொண்டாலை மேலக்கரை தர்ம முனியய்யா கோயிலில் புதியதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூன் 17., அன்று கும்பாபிஷேகம் நடந்தது.
48 நாட்கள் நிறைவான மண்டலாபிஷேக பூஜையை முன்னிட்டு கோயிலில் முன்புறம் யாகசாலை பூஜை உள்ளிட்ட ஹோம வேள்விகள் நடந்தது. மூலவர் தர்ம முனியய்யா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை (ஓய்வு) எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் தொண்டாலை மேலக்கரை கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.