108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோயில் சப்த பிரகாரங்களில் ஆலிநாடான் திருச்சுற்றில் பரமபத வாசலுக்கும், ஸ்ரீ கோதண்ட ராமர் சன்னதிக்கும் அருகில் சந்திரபுஷ்கரணி அமைந்துள்ளது.சந்திரபுஷ்கரணி முழு சந்திரனை போன்ற வட்ட வடிவத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஸ்தல விருட்சமான புன்னை மரமும், சந்திரபுஷ்கரணியின் அருகிலேயே உள்ளது.