பாலமேடு: பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார், கருப்புச்சாமி கோயில் உற்ஸவ ஆடித் திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் மறவர்பட்டியிலிருந்து சுவாமிகளின் பட்டத்துக்கு குதிரையை கோயிலுக்கு அழைத்து வந்தனர். ஆக.,6ல் மஞ்சமலை ஆற்றில் வாடிவாசல் முன் பாரம்பரிய எருதுகட்டு விழா நடந்தது. சுவாமி, கன்னிமார், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையை செய்தனர். பொது மகா சபை கட்டடத்தில் பல்லயம் பிரித்தல், நீராட்டுதல் விழா, கலை நிகழ்ச்சிகள் நடந்தது ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.