அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியில் பாகன் வகையறா பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கொட்டாரன் சுவாமி கோயில் உள்ளது. கோயில் கும்பாபிஷேகம், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு உலக மக்கள் நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.