Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னூர் பூச்சாட்டு திருவிழாவில் ... வாணியக்குடி முத்து மாரியம்மன் கோவில் பூக்குழி விழா வாணியக்குடி முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரம் சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா
எழுத்தின் அளவு:
சிவாலயபுரம் சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா

பதிவு செய்த நாள்

10 ஆக
2022
03:08

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழாவில் இன்று (10ம்தேதி)  7.15 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நவக்கிரக யாகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பால்குடம், பன்னீர் குடம், சந்தனக் குடம் பக்தர்கள் எடுத்து வந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை அலங்காரம் நடைபெற்றது. கோமதி அம்மன் வேண்டுதலுக்கிணங்க, சங்கரலிங்கம் சுவாமி சங்கர நாராயணராக பக்தர்களுக்கு காட்சி அளித்தார், சுவாமிகள் புறப்பாடு நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இன்று ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு முன்னிட்டு,  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். தும்பைப்பட்டி சங்கரன் வழி பங்காளிகள் குடும்பத்தினர், மற்றும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு  அன்னதானம் நடைபெற்றது.  திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், அரவிந்த் குருக்கள், வெங்கடேஷ்குருக்கள் சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar