Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாண்டி முனீஸ்வரர் கோயிலில் 108 ... விநாயகர் சதுர்த்திக்கு ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா; சிலை தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
கிருஷ்ண ஜெயந்தி விழா; சிலை தயாரிப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
10:08

தொண்டாமுத்தூர்: மாதம்பட்டியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிருஷ்ணர் சிலை தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும், 19ம் தேதி நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி அன்று, கோவில்கள், வீடுகளில், கிருஷ்ணர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இதனையொட்டி, தொண்டாமுத்தூர் அடுத்த மாதம்பட்டியில் உள்ள பொம்மை சிலை தயாரிக்கும் இடத்தில், கிருஷ்ணர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து மாதம்பட்டியை சேர்ந்த கைவினை பொருட்கள் தயாரிப்பாளரும், கைவினை கலைஞருமான, ஜெய்சூர்யா கூறுகையில்," எங்கள் குடும்பத்தினர், 150 ஆண்டுகளுக்கு மேலாக கைவினை சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். நான், பொறியியல் பட்டதாரி. தற்போது, நான் நான்காவது தலைமுறையாக, கைவினை சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

நாங்கள் அனைத்து தெய்வங்களின் சிலைகளையும், காகித கூழால் தயாரித்து வருகிறோம். தற்போது, கிருஷ்ண ஜெயந்தி வருவதால், கிருஷ்ணரின் குழந்தை பருவம் முதல் திருமணம் வரை உள்ள அனைத்து விதமான கிருஷ்ணர் சிலைகளும் செய்து வருகிறோம். அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா உள்ளிட்டவைகள் வருவதாலும், அதற்கும் சிலைகளை தயாரித்து வருகிறோம். எங்களிடம், கிருஷ்ண ஜெயந்திக்கான சிலை, 3 இன்ச் முதல் 4 ½ அடி உயரம் வரை உள்ளது. அதேபோல, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, 3 இன்ச் முதல் 1 ½ அடி வரையும், நவராத்திரி விழாவிற்கு, 3 இன்ச் முதல் 4 ½ அடி உயரம் வரையும் சிலைகள் உள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் சிலைகளை செய்து தருகிறோம். இந்த சிலைகளை, தமிழகம் முழுவதும் உள்ள பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கும் விற்பனை செய்து வருகிறோம்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar