ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், பெண்கள் பிரார்த்தனை செய்தனர். நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் திருவிளக்கு பூஜையில், சுற்றுப்புற பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.