சூலூர் : சூலூர் வட்டாரத்தில் ஆடி வெள்ளியை ஒட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று நடந்தன. சூலூர் மேற்கு அங்காளம்மன், குடலுருவி மாரியம்மன், அத்தனூர் அம்மன் கோவில்களில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். செங்கத்துறை அங்காளம்மன் கோவிலில் வளையல் அலங்காரத்திலும், மாகாளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.