கோபால்பட்டி,கோபால்பட்டி அருகே அய்யாபட்டி முனீஸ்வரன் கோவிலில் ஆடி மாத மத நல்லிணக்க அன்னதான விழா நடந்தது.
அய்யாபட்டியில் முனீஸ்வரன் கோவிலில் வருடம் தோறும் ஆடி மாத மத நல்லிணக்க அன்னதான விழா நடக்கும். இதையொட்டி இந்த ஆண்டு ஆடி அன்னதான விழாவிற்கு அய்யாபட்டி, செடிப்பட்டி, வேம்பார்பட்டி உள்ளிட்ட சுற்றுபகுதி கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மத மற்றும் சமுதாய மக்களும் விழா குழுவினரிடம் நிதி கொடுத்தனர். அதனைக் கொண்டு பத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு அசைவ அன்னதான உணவு சமைக்கப்பட்டது. பின் முனீஸ்வர சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. சாமிக்கு படையல் போட்டு பூஜை முடிந்த பின் அன்னதானம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து மத மற்றும் சமுதாய மக்களும் மத நல்லிணக்க முறையில் அன்னதான விழாவில் கலந்து உண்டு உணவருந்தினர். இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கார்த்திகை சாமி,ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிகரன், ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.