பழநி மலை கோயிலில் ரோப்காரில் புதிய பெட்டிகள் இணைத்து சோதனை ஓட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2022 11:08
பழநி: பழநி முருகன் கோயிலில் செயல்படும் ரோப்காரில் புதிய பெட்டிகள் அனைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.
பழநி முருகன் கோயிலுக்கு சென்று வர வின்ச் படிப்பாதை ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் காரில் மேலே சென்று வர எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலே செல்ல நான்கு பெட்டிகளும் கீழே இறங்கி வர நான்கு பெட்டிகளும் பயன்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிய வடிவமைப்புடன் 10 ரோப் கார் பெட்டிகள் செய்யப்பட்டது. இந்த கட்சிகள் பக்கவாட்டு திறப்பது போல் தயாரிக்கப்பட்டது. அப்போது அவற்றை பொருத்தி சோதனை செய்யும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே ரோப்காரில் இணைக்கப்படாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இந்நிலையில் புதிய பெட்டிகளில் வடிவமைப்பில் சில மாற்றம் செய்யப்பட்டது. அவற்றில் மேலே செல்ல ஒரு பெட்டியும், கீழே வர ஒரு பெட்டியும் என இரண்டு பெட்டிகளை மட்டும் பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆறு பெட்டிகளும் பழைய பெட்டிகளே இணைக்கப்பட்டிருந்தது.