விருதுநகர் விருதுநகர் மாவட்ட கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி பூஜை கோலாகலமாக நடந்தது. விருதுநகர் ராமர் கோயில் வளாகத்தில் கிருஷ்ணர் சன்னதிக்கு கிருஷ்ண ஜயந்தியை சிறப்பு ஹோமம், அபிஷேகம் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நவநீத பாலகிருஷ்ணன் கோயிலில் நடந்த ஜயந்தி பூஜையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பஜனை அலங்காரம் நடந்தது.சிவகாசி தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. சிவகாசி பேச்சியம்மன் கோயில், திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள், சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், மீனம்பட்டி கிருஷ்ணன் கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. சாத்துார் நவநீத கிருஷ்ணன் கோயில், வெங்கடஜலபதி கோயில், விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோயில், இருக்கன்குடி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணன் வேடமிட்டு வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகுப்படுத்தி ஒருவருக்கொருவர் பிரசாதங்கள் பரிமாறினர்.