புதுச்சேரி : புதுப்பேட்டை புத்துளாய் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. லாஸ்பேட்டை புதுப்பேட்டையில் புத்துளாய் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிேஷகம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, அம்மன் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயா குரூப்ஸ், அறங்காவல் குழு, மகளிர் மற்றும் இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.