மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை கன்னார் தெரு மாரியம்மன் கோவிலில் வீர சைவ சமூகத்தினர் சார்பில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவிற்காக கடந்த வாரம் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுதாது கடந்த ஒரு வார காலமாக காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் நேற்று காலை வைகை ஆற்றில் இருந்து பால்குடம்,கரகம், தீச்சட்டிகள் ஆகியவற்றை நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு 11 வகையான பொருள்களால் அபிஷேக,ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இன்று நகரின் முக்கிய வீதிகளின் வழியே சுவாமி ஊர்வலமும்,பூத்தட்டு ஊர்வலமும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை வீர சைவ சமூகத்தினர் செய்து வருகின்றனர்.