அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு அம்மன் உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2022 10:08
தாடிக்கொம்பு: அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு, நேற்று சாமி சயனம் கிடைத்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகரம் பேரூராட்சி முத்தாலம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவிற்கு தாடிக்கொம்பு, திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட ஏராளமான குக்கிராமங்களை சேர்ந்த சுற்று பகுதி மக்கள் திரளாக பங்கேற்பர். அரசு சிறப்பு பஸ்கள், கூடுதலான கடைகள், ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் என திருவிழா களைகட்டும். நேற்று மாலை சாமி சயனம் கேக்கும் நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலர்கள் மாரிமுத்து, மேகநாதன் உள்ளிட்ட பலர் பக்தியுடன் பங்கேற்றனர். சாமி சயணம் கொடுத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நிர்வாக அறங்காவலர் மாரிமுத்துவிடம் கேட்டபோது: முத்தாலம்மன் சாமி சயணம் கொடுத்ததை தொடர்ந்து, 9.10.2022 அன்று சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து 17.10.22 அன்று கண் திறப்பு நிகழ்ச்சியும், 18.10.22 அன்று சாமி பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்றார்.