சின்னாளபட்டி: ஆவணி அமாவாசையை முன்னிட்டு சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
* அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.