பதிவு செய்த நாள்
29
ஆக
2022
08:08
பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே பழனியப்பபுரத்தில் முத்தாரம்மன், உலகளந்த பெருமாள் சுவாமி, சுடலைமாட சுவாமி கோயில் விழா 5 நாட்கள் நடந்தது. கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம், சிறப்பு அலங்கார பூஜைகள் அபிஷேகம், தீபாராதனை, முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் பெட்டி ஊர்வலம், 508 திருவிளக்கு பூஜை, முத்தாரம்மன், உலகளந்த பெருமாள் சுவாமி, சுடலை மாட சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன. மேலும் விழாவில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.