பதிவு செய்த நாள்
29
ஆக
2022
11:08
உத்திரமேரூர்:காட்டாங்குளத்தில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் அடையாளம் தெரியாமல் அழிந்து வருவதாக அப்பகுதி வாசிகள் ஆதங்கப் படுகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அகத்தியர் இத்தலத்தில் ஈசனை வணங்கி பேறு பெற்றதால், அகத்தீஸ்வரர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் இருந்த கொடிமரம், பலிபீடம் மற்றும் உள் சுற்றில் இருந்த சுவாமிகளின் சன்னிதி களும், பின்புறத்தில் இருந்த தெய்வங்களுக்கான தனி சன்னிதிகளும் 30 ஆண்டுகளுக்கு முன்பாக வே இடிந்து சேதமாகி விட் டது. நந்திக்கான சன்னிதி யை தவிர, கோவில் வளாகத்தில் இருந்த வெளி மண்டபமும் இடிந்து, கலை நயமிக்க தூண்கள் மட்டுமே தற்போது காட்சியளிக்கிறது. தினமும் அப்பகுதி வாசிகள் சார்பில், தற்போது ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற பழமை யான இக்கோவில், ஒரு காலகட்டத்தில் பிரமிப் பான தோற்றத்தோடு இருந்ததாகவும், தற்போது தங்கள் கண் முன்னாலேயே அடையாளம் தெரியாத அளவிற்கு அழிந்து வருவதாகவும், அப்பகுதி வாசிகள் ஆதங்கப்படு கின்றனர். எனவே, இக்கோவில் கட்டடத்தை புணரமைப்பு பணி மேற்கொண்டு, பக்தர் களின் வழிபாட்டிற்கு கொண்டு வர அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.