பாசார் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2022 11:08
ரிஷிவந்தியம், : குடும்ப நலன் வேண்டி பாசார் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட, மரகதாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. கோவிலில் இளையான்குடி மாரநாயனார் ஜோதிவடிவமான தினத்தையொட்டி குரு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.இதற்காக, திருவண்ணாமலையில் இருந்து 51 சாது, சன்னியாசிகள் வரவழைக்கப்பட்டு, திருமடம் சார்பில் மகேஸ்வர பூஜை செய்யப்பட்டது. பூஜையில், பாதபூஜை செய்து, மாலை அணிவித்து, சாது, சன்னியாசிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.தொடர்ந்து, குடும்ப நலன் வேண்டி நடந்த குத்துவிளக்கு பூஜையில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. திருக்கழுக்குன்றம் திருவாசகசித்தர் சிவதாமோதரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.