காளஹஸ்தி சிவன் கோயிலில் கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2022 12:08
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு கர்நாடகா மாநில ஐகோர்ட் நீதிபதி பிரபாகர் சாஸ்திரி குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர் .தொடர்ந்து கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர். முன்னதாக இவர் சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.