தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார் நாயகம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞரை பார்த்து பல்துலக்க குச்சி வேண்டும் எனக் கேட்டார். இரு நேரான குச்சிகளையும், ஒரு வளைந்த குச்சியையும் கொண்டு வந்தார் இளைஞர். நேரான குச்சிகளை தன்னுடன் வந்தவர்களுக்கு கொடுத்து விட்டு வளைந்த குச்சியை தனக்கு எடுத்துக் கொண்டார். அதை பார்த்த இளைஞருக்கு ஆச்சரியம். ‘‘தாங்கள் தானே நேரான குச்சியை எடுக்க வேண்டும்’’ எனக் கேட்டார். மற்றவருக்கு கொடுக்கும் பொருள் நல்லதாகவே இருக்க வேண்டும் என்பதை இச்செயலால் உணர்ந்தார் இளைஞர்.