Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா ரூ.316 ... 40 ஆண்டுக்கு முன் மாயமான சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு 40 ஆண்டுக்கு முன் மாயமான சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா: பந்தளத்தில் கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா: பந்தளத்தில் கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2022
11:08

பந்தளம் : கேரள மாநிலம், பந்தளத்தில், ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா, கோலாகலமாக நேற்று துவங்கியது.

சபரிமலை மேல் சாந்தியாக பணிபுரிந்த அனந்தகிருஷ்ண ஐயரின் மகள் கோனகத்து ஜானகியம்மாள், 1923ல், ஐயப்பனை பிரார்த்தித்து ஹரிவராசனம் பாடலை இயற்றினார். பின், திரைப்பட பின்னணி பாடகர் ஜேசுதாஸ், இதை இசையோடு பாடியதையடுத்து, இசைத்தட்டு வடிவில் வெளிவந்த ஹரிவராசனம் பாடலை, நடையடைக்கும்போது இசைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இப்பாடலின் நுாற்றாண்டு விழாவை, ஆண்டு முழுவதும் விமரிசையாக கொண்டாட, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தீர்மானித்து, ஹரிவராசனம் நுாற்றாண்டு கமிட்டி அமைக்கப்பட்டது. தமிழகத்தின், 22 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழக தலைவராக, திருச்சி தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர்.ராமசுப்பு தலைமையில் கமிட்டி உருவாக்கப்பட்டது. இதன் சர்வதேச தலைவராக இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பந்தளத்தில், ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா பிரமாண்ட பேரணியை, சமாஜ பொதுச் செயலாளர் ஈரோடு ராஜன் கொடியேந்தி துவக்கி வைத்தார். பந்தள ராஜா குடும்பத்தை சேர்ந்த சசி குமாரவர்மா தலைமை வகித்தார்.கோவையை சேர்ந்த குழுவினர், பச்சைக்காளி, பவளக்காளி ஆடிவந்தனர்.
மேலும், பல மாநிலங்களின் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவில், முன்னாள் மேல்சாந்தி கோஷாலா விஷ்ணு வாசுதேவ நம்பூதிரி உட்பட பல பிரமுகர்கள் திரளாக பேரணியில் பங்கேற்றனர். பேரணி, பந்தளம் அரண்மனை அருகே நிறைவடைந்து; தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது.

பிரதமர் பங்கேற்கிறார்: பந்தளத்தில் தொடங்கிய ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், நாடு முழுவதும் 18 மாதங்கள் நடக்க உள்ளது. நிறைவு விழா 2024 ஜன., 20, 21ம் தேதிகளில், திருவனந்தபுரத்தில் பிரமாண்டமாக நடக்க உள்ளது. விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

முன்னாள் நீதிபதி பரவசம்: முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ஹரிவராசனம் பக்தி பாடல் மட்டுமல்ல. நம்முடைய கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இதை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும், மாவட்டம்தோறும் ஒருங்கிணைந்து ஆன்மிகத்தையும், கலாசாரத்தையும் நிலைநாட்ட வேண்டும், என்றார். பாடகர் வீரமணி ராஜு, வீடுதோறும் தினமும் எல்லாரும் ஹரிவராசனம் பாட வேண்டும் என்று கூறி, பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் பாடினார்.விழாக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் வரவேற்றார். முன்னாள் நீதிபதி ராதாகிருஷ்ணன், பாடகர் ஜெயன், பின்னணி பாடகர் வைக்கம் விஜயலட்சுமி, அசாம் முன்னாள் கவர்னர் ராஜசேகரன் மற்றும் பல மடங்களைச் சேர்ந்த துறவிகள் பேசினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சென்னை; திருப்பதி பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar