பதிவு செய்த நாள்
30
ஆக
2022
11:08
திருவொற்றியூர்: சிறிய வகை விநாயகர் சிலையில், எலிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவ விநாயகர் சிலை, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலம் அருகே, இந்திரா நகரில், 20 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி, சிறிய வகை சிலைகள் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.அதன்படி, சாதாரண நேரங்களில், பூக்குடுவை, அழகு மற்றும் கலைநயப் பொருட்கள் செய்து, சந்தைப்படுத்துவர். கிருஷ்ண ஜெயந்திக்கு, கிருஷ்ணரை பல வகையில் சிலைகள் செய்துவிற்பனை செய்வர். இந்நிலையில், வரும், 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக, பிரமாண்ட விநாயகர் சிலைகள் வாங்கி, அதனை பிரதி ஷ்டை செய்து, ஊர்வலமாக கடலில் கொண்டு சென்று கரைப்பர்.அது ஒருபுறமிருக்க, வடமாநிலத்தவரால் செய்யப்படும் சிறிய வகை விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் வீடுகளில் வாங்கி வைத்து வழிப்பட்டபி ன், நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதன்படி, ஆண்டுதோறும், மயில், எலி, அன்னம், சிம்மாசனத்தின் மீது அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைகள், அரை அடி முதல், 5 அடி வரை செய்து விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாண்டு, சிறிய வகை விநாயகர் சிலைகளில், எலிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவ விநாயகர் சிலைகள், பார்வையாளர்களை வெகுவாக கவ ர்ந்திழுந்துள்ளது. வீட்டில் குழந்தைகள் விருப்பமும், மருத்துவ விநாயகராக தான் இருக்கும்.
இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, வியாபாரம் மிக மோசமாக இருந்தது. இவ்வாண்டு, இயல்பான சூழல் இருப்பதால், வழக்கம் போல், விற்பனை களைகட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வட்டிக்கு பணம் வாங்கி, இரண்டு மாதங்களாக உழைத்து, விநாயர்கள் சிலைகள் செய்யப்பட்டு, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.