கருப்பத்துார் தாழம்பூ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திருத்தேரில் அம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துாரில் தாழம்பூ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, திருத்தேரில் வைத்து கருப்பத்துார் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். அம்மன் திருத்தேர் திருவீதி உலா நிகழ்ச்சியில், பகுதி மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கருப்பத்துார், லாலாப்பேட்டை ஆகிய சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.