பதிவு செய்த நாள்
07
செப்
2022
04:09
குன்னூர்: குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில், ராணுவ வீரர்களின் ஓணம் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மக்களின் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், நேற்று மறுநாடன் மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரியில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில், ராணுவ வீரர்கள் செண்டை மேளம் முழங்க, களரி பயிற்சியிலும் ஈடுபட்டனர். மகாபலி எனும் மாவேலி மன்னரை வரவேற்கும் வகையிலும், மகா விஷ்ணுவின் வாமன அவதாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், வேடமணிந்த ராணுவ வீரர்கள் வலம் வந்து அசத்தினர். இதில், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். ஓண சத்யா விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் மலையாள மக்களின பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.