கரிவலம்வந்தநல்லுார் பால்வண்ணநாத சுவாமி கோயில் ஆவணி பசுக்காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2022 04:09
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லுார் பால்வண்ணநாத சுவாமி கோயில் ஆவணி பசு காட்சி நடந்தது. கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயில் ஆவணி தபசு திருவிழா 2 ஆண்டுகளுக்கு பின் ற்று முன்தினம் நடந்தது. முன்னதாக கடந்த 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி ற்று முன்தினம் நடந்தது. கம்மவார் சமுதாய பொது மண்டகப்படியான அன்று காலை 10 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 4.30 ணிக்கு ஒப்பனை அம்மாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசுக்கு மண்டபத்திற்கு எழுந்தருளினார். காலை 6 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த காட்சி மண்டபத்திற்கு சென்றடைந்தார். 6.30 மணிக்கு அம்பாளுக்கு முகலிங்கநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. முதல் காட்சி கொடுத்த அதே இடத்தில் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு இரவு 9.15 ணிக்கு மேல் பால்வண்ணநாதராக காட்சி கொடுத்தார். தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.