பதிவு செய்த நாள்
11
செப்
2022
06:09
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் ஊராட்சி பெத்தியகவுண்டன்பட்டி விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில்களில் திருவிழா, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
விழாவையொட்டி செப்.9 காப்பு கட்டுதல் விநாயகர், சாத்தா சாமிக்கு பொங்கல் வைத்தல், பூஞ்சோலையில் இருந்து கரகம் ஜோடிக்கு மேளதாளம், வானவேடிக்கையுடன் அம்மன் கோவில் வந்தடைதல் நடந்தது. செப்.10 காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். இன்று அம்மன் சன்னதியில் இருந்து ஆட்டம் பாட்டம், மேளதாளம் மற்றும் அதிர்வெட்டுகள் முழங்க கரகம் மற்றும் முளைப்பாரியுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைதல் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பெத்தியகவுண்டன்பட்டி உழவர்குடி, பழநிமாநகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.