ராஜகணபதி கோவிலில் மூலவருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2022 08:09
சேலம் : ராஜகணபதி கோவிலில் மூலவருக்கு நேற்று 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.
சேலம் ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நிறைவையொட்டி, மூலவருக்கு நேற்று 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.