பதிவு செய்த நாள்
21
ஆக
2012
10:08
பழநி: ஒரு மாத கால பராமரிப்பு பணிகளுக்கு பின், பழநி கோவில் ரோப் கார் இயக்கம் மீண்டும் நேற்று துவங்கியது. மேல், கீழ் தளத்தில், 24 சக்கரங்களை கொண்ட சீவ் பகுதி, உயர் கம்பம், பெரிய சக்கரங்கள் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்தன. 660 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு கயிறு பொருத்தப்பட்டு, பெட்டிகளுக்கு வர்ணம் பூசப்பட்டது. சோதனை ஓட்டமும் நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்து, ரோப்கார் இயக்கம் துவங்கியது.
தங்க ரத புறப்பாடு: விடுமுறை தினமானதால், பழநி கோயிலில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் திரண்டனர். நேற்று முன் தினம் இரவு தங்க ரத புறப்பாட்டிற்கு 225 பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். இதன் மூலம் வசூல் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் . எத்தனை பேர் தங்க ரத புறப்பாட்டிற்கு பணம் கட்டியிருந்தாலும், ஒரே ஒரு முறை தான் தங்க ரதம் வெளிப்பிரகாரத்தில் உலாவரும்.