Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : புரட்டாசி மாத பலன் மேஷம்: ஐப்பசி மாத பலன் மேஷம்: ஐப்பசி மாத பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மீனம் : புரட்டாசி மாத பலன்
எழுத்தின் அளவு:
மீனம் : புரட்டாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

17 செப்
2022
03:09

பூரட்டாதி - 4:
அடுத்தவர்களை நன்கு உபசரிக்கும் உங்களுக்கு இந்த மாதம் பணதேவை பூர்த்தியாகும். சூர்யன் சஞ்சாரத்தால் இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். புதன் சஞ்சாரம் எழுத்துதுறையில் இருப்பவர்கள் சாதிப்பார்கள். கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்ப வர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தினர்களுடன் கவன மாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைக ளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். பண விவகாரங்களில் கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.
பரிகாரம்: குபேரனை வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும்.
சந்திராஷ்டமம்: செப். 26
அதிர்ஷ்ட நாள்: செப். 21

உத்திரட்டாதி:
கடின உழைப்பினால் முன்னேறும் உங்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரவு கூடும். கிரகநிலைகள் காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்னைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். பணியாளர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். மதிப்பும், மரியாதையும் கூடும். அரசியல் துறையினருக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.
பரிகாரம்: சரஸ்வதியை வழிபட தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 27
அதிர்ஷ்ட நாள்: செப். 22

ரேவதி:
எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் இயல்பு உடைய உங்களுக்கு இந்த  மாதம்  நட்சத்திரநாதன் புதனால் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பணவரவு குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந் தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். பணியாளர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். பல வழிகளிலிருந்து பணம் வரும். அரசியல் துறையினருக்கு சாதகமான பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.  மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.
பரிகாரம்: குருபகவானை வணங்கி வர மனக்கவலை நீங்கும்.
சந்திராஷ்டமம்: செப். 28
அதிர்ஷ்ட நாள்: செப். 22

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar