லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருப்பணிக்கு தொல்லியல் துறை அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2022 06:09
சின்னமனுார்: சின்னமனுாரில் புராதானமான லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் திருப்பணி செய்வதற்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த கோயிலில் ராஜகோபுரம் கட்ட பக்தர்கள் கோரிக்கை எழுத்துன்றது.
செப்பேடுகள் கண்ட சின்னமனுாரில் புராதானமான சிவகாமியம்மன் கோயில் மற்றும் லெட்சுமிநாராயணா பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துள்ளது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இந்த இரண்டு கோயில்களிலும் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளாகி விட்டது. தற்போது சிவகாமி அம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்யும் பணி துவங்கியுள்ளது.
ஆனால் லெட்சுமிநாராயாணா பெருமாள் கோயில் திருப்பணி தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்திலையில் லெட்சுமிநாராயணா பெருமாள் கோயில் திருப்பணி செய்வதற்கு தொல்லியல் துறை ஆய்வ நடத்தி அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, " தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இனி மண்டல கமிட்டி மற்றும் மாநில கமிட்டியின் அனுமதி பெற வேண்டும். விரைவில் அதற்கான அனுமதி பெற்று திருப்பணி மேற்கொள்ளப்படும்" என்றனர். இதற்கிடையே பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் நிற்பது போன்ற அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது என்றும், இந்த கோயிலில் ராஜகோபுரம் கட்ட ஹிந்து ஆய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.