புரட்டாசி சனி : தஞ்சாவூர் பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 11:09
தஞ்சாவூர் : புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தஞ்சாவூர் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு தஞ்சாவூர் நாலுகால் மண்டபத்தில் உள்ள சீனிவாச வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் தாயார் ரத்தினாங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். தஞ்சாவூர், கும்பகோணம் அருகே, உள்ள திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு, உப்பிலியப்பன் (வெங்கடாசலபதி) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.