திருவையாறில் மகாளய அமாவாசை : காவேரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2022 08:09
தஞ்சாவூர், திருவையாறில் மஹாளய அமாவாசையையொட்டி, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், காவிரி ஆற்றில் புனித நீராடியும் வழிபட்டனர்.
ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்று சிறப்பு பெற்றது. இந்நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது ஓராண்டிற்கான திதி அளித்ததற்கு சமம். திருவையாறு புஷ்பமண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கனிகள், கீரைகள் வைத்து முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் செய்து காவேரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். இதையொட்டி, திருவையாறு ஐயாரப்பர், அம்சவர்த்தினி சுவாமிகள் புஷ்ப மண்டப படித்துறைக்கு எழுந்தருளினர். பின்னர், நான்கு வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது.