கோவை: கோவை, ஈச்சனாரி மஹாலக்ஷ்மி மந்திரில் நவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் 21-ஆம் ஆண்டு கொலு பொம்மை கண்காட்சி துவங்கியது. இதில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்க பட்டுள்ளன. சிறப்பு அலங்காரத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.