உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா; ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2022 01:09
பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். கொரோனாவால் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்டது. தொற்று பரவல் வெகுவாக குறைந்ததாலும், மாநிலம் முழுதும் மழை பெய்து செழிப்புடன் இருப்பதாலும், இம்முறை தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்தது. இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் பயணமாக நேற்று (செப்.,25) கர்நாடகா சென்றார். தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்ற மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை துவக்கி வைத்தார். இன்று துவங்கும் தசரா விழா, அக்டோபர் 5ம் தேதி ஜம்புசவாரி ஊர்வலத்துடன் நிறைவுபெறுகிறது.