அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த அவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2022 05:09
அவிநாசி: மகாளய அமாவாசை தினமான நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,பல மணி நேரம் வெயிலில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.பக்தர்களுக்காக சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யாமல் கோவில் நிர்வாகத்தினர் அலட்சியம்.
அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலில் உள்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நிழலில் நிற்பதற்கான தகர செட்,பக்தர்கள் வரிசையில் வருவதற்கான கியூ அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு முன்னோர்பாடுகள் என, எதுவும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யவில்லை.அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்ததால் வெயிலில் பல மணி நேரமாக உள் பிரகாரத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் தங்களின் குழந்தைகளுடன் வந்திருந்ததால் வெயிலில் நிற்க முடியாமல் அருகில் உள்ள சபா மண்டபத்தில் அமர்ந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில், சுவாமி தரிசனம் செய்யவும், திதி,தர்ப்பணம் கொடுப்பதற்கும் மக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருவார்கள் என்பது கோவில் நிர்வாகத்திற்கு தெரிந்திருந்தும் டூவீலர், கார் உள்ளிட்ட வாகன பார்க்கிங்க்கு மட்டும் அதிக அளவில் வாகனங்கள் வந்தால் நிறுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகளாக கோவிலுக்கு அருகிலுள்ள நட்சத்திர பூங்காவை திறந்து அதனுள் டூவீலர் மற்றும் கார்களை நிறுத்த பார்க்கிங்க்கு ஏற்பாடு செய்திருந்தனர்.