Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் ‘சக்தி ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்: பிரம்மாண்ட கொலு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நவராத்திரி விழா துவங்கியது: அரோகர கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பழநியில் நவராத்திரி விழா துவங்கியது: அரோகர கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

27 செப்
2022
07:09

பழநி: பழநி, மலை கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது.

பழநி, மலைக்கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது. இதில் முதல் நிகழ்ச்சியாக சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலையில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் மூலவர்,மயில் வாகனம், கோயில் யானை கஸ்தூரிக்கு காப்பு கட்டப்பட்டது. திருஆவினன்குடி சுவாமிக்கு காப்பு கட்டினர். மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜைக்கு பின் மூலவர், சண்முகர், வள்ளி, தேவயானை, துவாரபாலகர், மயில் வாகனம், நவவீரர்கள் ஆகியவற்றிற்கு அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமண்ய குருக்கள் காப்பு கட்டினர். அக்., 4ல் மலைக்கோயிலில் பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பராசத்தி வேல் புறப்பட்டு மலைக்கோயில் சன்னதி திருக்காப்பிடப்படும். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வேலுடன் தங்க குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி எழுந்தருளி கோதைமங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வில் சூரன் வதம் நடைபெறும். அதன்பின் பராசக்தி வேல் மலைக்கோயில் அடைந்த பின் அர்த்த சாம பூஜை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகள் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடைபெறும். நவராத்திரி விழாவில் மாலை 6:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். விழாவில், பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar