நவராத்திரி விழா: ராமேஸ்வரம் கோயிலில் கொலு பொம்மைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2022 17:30
ராமேஸ்வரம்: நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் பார்வைக்கு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் செப்., 25ல் நவராத்திரி விழாவுக்கு பர்வதவர்தினி அம்மனுக்கு காப்பு கட்டி விழா துவங்கியது. நேற்று கோயிலில் அம்மன் சன்னதி அருகே 500க்கு மேலான கொலு பொம்மைகள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். 2ம் நாள் விழாவான இன்று கோயிலில் ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் பர்வதவர்த்தினி அம்மன் மகாலட்சுமி அவதாரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.