Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ... சூரியனார்கோவில் 30வது ஆதினமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசார்ய சுவாமிகள் பதவியேற்பு சூரியனார்கோவில் 30வது ஆதினமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிருகு மஹரிஷி தவம் செய்த ‘பூலோக சொர்க்கம்’ ஹேமகிரி
எழுத்தின் அளவு:
பிருகு மஹரிஷி தவம் செய்த ‘பூலோக சொர்க்கம்’ ஹேமகிரி

பதிவு செய்த நாள்

12 பிப்
2026
02:02

நகரங்களின் பரபரப்பான வாழ்க்கை, வாகனங்களின் சத்தம், ஓய்வில்லா பணிச்சுமை, குடும்ப பிக்கல் பிடுங்கல் என, நெருக்கடியான வாழ்க்கையால் வெறுப்படையும் மக்கள், ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும், அமைதியான சுற்றுலா இடங்களை தேடி செல்கின்றனர். இத்தகையோரை வரவேற்கிறது ஹேமகிரி.


பூலோக சொர்க்கம் பசுமை படர்ந்த அழகான மலை, அதன் மீது புராதன கோவில், சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, கண்களை கவரும் பசுமையான வயல்கள், தோட்டங்கள், சலசலவென ஓடும் ஆறு, ஆற்றின் இசையை ரசித்தபடி தலை அசைக்கும் தென்னை மரங்கள், உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்க்காற்று, சுற்றுலா பயணியரை குஷிப்படுத்த, இதை விட வேறு என்ன வேண்டும். இந்த அற்புதமான காட்சிகளை காண, அனுபவிக்க விரும்பினால், ஹேமகிரி மலைக்கு வர வேண்டும். இது, பூலோக சொர்க்கம் என்றே அழைக்கப்படுகிறது. மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட் தாலுகாவில், ஹேமகிரி மலை அமைந்துள்ளது. இது, ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. இந்த மலையில் பிருகு மகரிஷி தவம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. வைகுண்டத்தில் இருந்த மஹாவிஷ்ணு, தன் மனைவி மஹாலட்சுமியுடன் சண்டை போட்டு, கோபித்து கொண்டு பூலோகத்துக்கு வந்து நிலை நின்ற இடமே ஹேமகிரி மலையாகும். ரங்கநாத சுவாமியாக அவதரித்து, பத்மாவதியை திருமணம் செய்கிறார். இங்கு பத்மாவதியை மணமுடித்ததால், கல்யாண வெங்கடரமண சுவாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.


எண்ணிக்கை அதிகமாகும் ஹேமகிரி மலையை சுற்றிலும், ஹேமாவதி ஆறு பாய்கிறது. மலையில் பாய்ந்து சென்று, கே.ஆர்.எஸ்., அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றுடன் சங்கமமாகிறது. ஹேமாவதி பாயும் பகுதிகளில், நெல், கரும்பு, தென்னை, பாக்கு உட்பட பல்வேறு பயிர்கள் மற்றும் மரங்கள் செழுமையாக வளர்ந்து, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன. ஹேமாவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாயும். இங்கு படகு சவாரி உட்பட நீர் சாகச விளையாட்டுகளை துவக்கினால், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று, சுற்றுலா வல்லுநர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மாண்டியாவின் சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஹேமகிரிக்கு சுற்றுலா பயணியர் வருகின்றனர். மலையேற்றம் செய்ய இளைஞர்கள், இளம் பெண்கள் வருகின்றனர். கோவிலுக்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். பிப்ரவரி, 14ம் தேதி காதலர் தினம் என்பதால், ஹேமகிரி மலைக்கு ஜோடி, ஜோடியாக காதலர்கள் வருவர்.


எப்படி செல்வது?: பெங்களூரில் இருந்து 155 கி.மீ., மைசூரில் இருந்து 65 கி.மீ., மாண்டியாவில் இருந்து மைசூரில் இருந்து 70 கி.மீ., தொலைவில், கே.ஆர்.பேட் உள்ளது. கே.ஆர்.பேட்டில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் ஹேமகிரி மலை உள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து, கே.ஆர்.பேட்டுக்கு அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வந்தால், மைசூரில் இறங்கி அங்கிருந்து, வாடகை வாகனங்களில் மலைக்கு செல்லலாம். அனுமதி நேரம்: காலை 10:00 முதல், மாலை 6:00 மணி வரை. அருகில் உள்ள தலங்கள்: ஹேமகிரி நீர் வீழ்ச்சி, மேலுகோட்டே வன விலங்குகள் சரணாலயம், ஷ்ரவண பெலகோலா, தொன்னுார் ஏரி, கே.ஆர்.எஸ்., அணை, ஹொச ஹொலலு. – நமது நிருபர் – 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar