திருப்பதி பிரம்மோற்சவம் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2022 08:09
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவத்தின் 2ம் நாளான நேற்று காலை சின்னசேஷ வாகனத்தில் பத்ரி நாராயணசுவாமி அலங்காரத்தில் மாடவீதியில் எழுந்தருளிய மலை யப்பசுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.
திருப்பதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பெரிய சேஷ வாகனத்தில் பல அலங்காரங்களில், மலையப்ப சுவாமி எழுந்தருளினார். உலர் திராட்சையால் தயாரிக்கப்பட்ட மாலையில் உற்சவமூர்த்தி, பச்சை பட்டு நுாலால் தயாரிக்கப்பட்ட மாலை மற்றும் கிரீடத்தில் ஸ்ரீதேவி – பூதே வி சமேத மலையப்ப சுவாமி, பட்டு துணியால் செய்யப்பட்ட கிரீடத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். 2ம் நாளான நேற்று காலை சின்னசேஷ வாகனத்தில் பத்ரி நாராயணசுவாமி அலங்காரத்தில் மாடவீதியில் எழுந்தருளிய மலை யப்பசுவாமி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.