பதிவு செய்த நாள்
29
செப்
2022
02:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், பா.ஜ., மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, பா.ஜ., மற்றும் இந்து முன்னணியின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளை, போலீசார் அடிக்கடி ரோந்து சென்று, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அருணாசலேஸ்வரர் கோவிலில், நான்கு முக்கிய கோபுர நுழைவு வாயிலில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மெட்டல் டிடெக்டர் மூலம், பக்தர்கள் பலத்த பரிசோதனைக்கு பிறகே, கோவிலினுள் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.