புவனகிரியில் ராகவேந்திர சுவாமிகள் வணங்கிய கோவிலை புதுபிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2022 04:09
புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரர் சுவாமி தரிசனம் செய்த ஆஞ்சநேயர் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், புவனகிரியில் ராகவேந்திர சுவாமிகளின் முன்னோர்கள் ஸ்ரீ வீரஆஞ்சநேய சுவாமிக்கு கோவில் எழுப்பியுள்ளனர்.
சுற்றுபகுதியினர் விவசாயம் மற்றும் வர்த்தகம் செழிக்க இக்கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சுவேதநதி (வெள்ளாறு) யில் நீராடி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை வழிபாடு செய்து தன் இல்லத்திற்கு வருவது வழக்கம். அவரை தொடர்ந்து பக்தர்கள் பலர் அந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சவாமிகள் மந்தராலயம் சென்ற பின் கோவில் பராமறிப்பு இல்லாமல் கிடந்துள்ளது. அதன் பின் ராகவேந்திரர் பக்கதர்கள் சில காலம் பாதுகாத்தனர். தற்போது அந்த கோவில் மற்றும் மகான் நடந்து வந்த சாலை பராமறிப்பு இல்லாமல் கிடக்கிறது. எனவே இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்துவதுடன், அந்த சாலையையும் சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.