ஞானபுரீ கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2022 05:10
திருவாரூர்: ஞானபுரீ சங்கடஹர மங்கல மாருதி அஞ்ச நேய சுவாமி கோவில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே அமைந்துள்ளது ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ சங்கட ஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் சுவாமிக்கு வலதுபுறத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், இடது புறத்தில் ஸ்ரீகோதண்டராமர் சுவாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையான இன்றி காலை 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு மஞ்சள், பால், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆஞ்சநேய சுவாமிக்கு மஞ்சள் பட்டாடை உடுத்தி, துளசி, மலர் மாலைகளால் அலங்கரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிறப்பு அபிஷேக, ஆராதனைக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீகரியம் சந்திரமௌலீஸ்வரர் ஆகியோர் செய்து இருந்தனர்.